தான் வகிப்பது பதவி அல்ல பொறுப்பு! முதல்வர்!
தான் வகிப்பது பதவி அல்ல பொறுப்பு! முதல்வர்! மு.க.ஸ்டாலின் பார்வையாளர் பதிவேட்டில் குறிப்பெழுதினார்!
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு/ மு.க. ஸ்டாலின் அவர்கள் திருவாரூர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி வாழ்ந்த இல்லத்திற்குச் சென்று அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
மேலும் முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் பெற்றோர்கள் முத்துவேலர் தாத்தா-அஞ்சுகம் பாட்டியின் சிலைக்கு மரியாதை செய்தார்.
இதுகுறித்து சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு/ உதயநிதி ஸ்டாலின் MLA, தனது டுவிட்டரில்
பக்கத்தில் கூறியிருப்பதாவது!
கழக தலைவர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக முத்தமிழறிஞரின் திருக்குவளை இல்லத்துக்கு சென்றபோது, அங்குள்ள பார்வையாளர் பதிவேட்டில், தான் வகிப்பது பதவி அல்ல பொறுப்பு என்று பார்வையாளர் பதிவேட்டில் குறிப்பெழுதினார். கலைஞர்-கழக தலைவர் வழியில் நாமும் கடமையாற்றுவோம்.
முத்தமிழறிஞர் அவர்களுடைய திருக்குவளை இல்லத்தில் கலைஞரை ஈன்றெடுத்த முத்துவேலர் தாத்தா-அஞ்சுகம் பாட்டியின் சிலைகள்-கலைஞர்-அவரது மனசாட்சியான மறைந்த முரசொலி மாறன் அவர்களின் சிலைகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் குடும்பத்தாருடன் இணைந்து மரியாதை செய்தோம்.
கலைஞர் வழியில் சமூகநீதி காப்போம் என
திரு/ உதயநிதி ஸ்டாலின் MLA டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்.
செய்தி: S.MD. ரவூப்