இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கான பணியை அரசியல் கட்சிகளிடம் ஒப்படைத்துவிடக்கூடாது.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு,- இஸ்லாமியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறுபவர்கள் இந்துக்கள் என கூறிக்கொள்ள தகுதியவற்றர்கள்-

காசியாபாத்,

இந்தியாவில் பாதுகாப்பில்லை என்ற தவறான பிரசாரத்தில் முஸ்லீம்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது எனவும் மோகன் பகவத் கூறினார்.

உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தில் முஸ்லிம் ராஷ்டீரிய மஞ்ச் நேற்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இஸ்லாமியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறுபவர்கள் இந்துக்கள் என கூறிக்கொள்ள தகுதியவற்றர்கள். பசுக்காவலர் என்ற பெயரில் தாக்குவது நடத்துவது இந்துத்வா அல்ல. இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற அச்சத்தை உருவாக்க சிலர் நினைக்கின்றனர். இந்தியாவில் பாதுகாப்பில்லை என்ற தவறான பிரசாரத்தில் முஸ்லீம்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது.

இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கான பணியை அரசியல் கட்சிகளிடம் ஒப்படைத்துவிடக்கூடாது. இரு மதங்களுக்க்கு இடையேயான பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும். ஜனநாயக நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஆதிக்க சக்தியாக நினைத்துக்கொள்ளக்கூடாது. அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணமே மனதில் இருக்க வேண்டும்” என்றார்

செய்தியாளர்
ரஹ்மான் தமிழ்மலர் மின்னிதழ்