சட்டப்பேரவையில் காகிதம் இல்லா இ-பட்ஜெட் தாக்கல். சபாநாயகர் அறிவிப்பு!
தமிழக சட்டமன்ற
தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் தலைமையில் சட்டமன்ற விதிகள் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் திரு/ மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக, அதிமுகவை சேர்ந்த 12 சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சட்டப்பேரவையில் மின்னனு முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் .
சட்டப்பேரவை நடவடிக்கைகளை காகிதம் இல்லாத முறையில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். வரும் பட்ஜெட்டை இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யவும் ஆலோசனை நடைபெறுகிறது. தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தி வருவது திமுக அரசுதான்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் டேப்லட் (TAB) வழங்கப்படும், நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்” என்றார்.
செய்தி: S.MD. ரவூப்