வன்னியர் சமூகத்துக்கான 10.5% உள் ஒதுக்கீடுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது

வன்னியர் சமூகத்துக்கான 10.5% உள் ஒதுக்கீடுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட மனு மீது தமிழக அரசு பதிலளிக்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

வன்னியர் சமூகத்துக்கான 10.5% உள்ஒதுக்கீடுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என தமிழகத்தை சேர்ந்த இருவர் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் வன்னியர் சமூகத்திற்கு அளிக்கப்பட்ட10.5 சதவீத உள் ஒதுக்கீடுக்கு எதிராக சென்னையை சேர்ந்த இருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், ”10.5 சதவீத உள் இட ஒதுக்கீடுக்கு எதிராக இடைக்கால தடை விதிக்க முடியாது. ஏற்கனவே, இதே விவகாரம் தொடர்பாக மதுரையை சேர்ந்த அபிஷ்குமார் தாக்கல் செய்த மனுவுடன் இந்த வழக்குகளும் விசாரிக்கப்படும். இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ் மலர் மின்னிதழ் செய்தியாளர்.M G தமீம் அன்சாரி