தமிழ்நாட்டில் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது!!!!
டெல்லி: தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் செப்.15-க்குள் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 6 மாதம் அவகாசம் அளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தால் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் தேர்தல் நடத்த ஆணையிட்டுள்ளனர்.
புதிதாக பிரிக்கப்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் விடுபட்டு போன நகர்ப்புற மற்றும் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை செப்.15க்குள் நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும்.
கொரோனாவை காரணம் காட்டி தேர்தலை நடத்தாதது ஏற்புடையது அல்ல என உத்தரவு பிறப்பித்தது. அரசு தரப்பில் கோரப்பட்ட 6 மாதம் அவகாசம் அளிக்கவும் கோர்ட் மறுத்துவிட்டது.
A. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்