திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் (ஐஜி) வே. பாலகிருஷ்ணன் அவர்களை மறுமலர்ச்சி திமுக மாவட்ட செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்,

திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் (ஐஜி) வே. பாலகிருஷ்ணன் அவர்களை மறுமலர்ச்சி திமுக மாவட்ட செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்,
திருச்சி மத்திய மண்டல காவல் துணை தலைவராக பணியாற்றிய பெருமைக்குரிய வே.பாலகிருஷ்ணன் அவர்கள் பதவி உயர்வு பெற்று திருச்சி மத்திய மண்டலத்திற்கு காவல் துறை தலைவராக பதிவி உயர்வு பெற்று இருக்கிறார், ஏற்கனவே அவர் டிஐஜியாக இருந்தபோது தொலைபேசி வாயிலாக புகார் தெரிவித்தால் நேரடியாக தனிக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்கக்கூடிய நேர்மையான அதிகாரி, அவர் எந்த ஊரில் பொறுப்பில் இருந்தாலும் எளிய மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி உதவுவதில் முன்னோடியாகத் திகழ்வார், பொதுமக்கள் தரப்பில் இருந்து சொல்லப்படும் புகார்கள் மீது செவிசாய்த்து கேட்பார், காவல்துறை உயர் அதிகாரி என காட்டிக்கொள்ளாமல் மிக எளிமையாக பழகக்கூடியவர், அடிக்கடி விழிப்புணர்வு காணொளிகளை சமூக வலைதளங்களின் மூலம் பகிர கூடியவர், நல்ல தமிழ் மொழி சிந்தனையாளர், ஐஜி வே.பாலகிருஷ்ணன் அவர்களை மறுமலர்ச்சி திமுக சார்பாக மாவட்ட செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் நேரில் சந்தித்து அவருக்கு திருக்குறள் நூல் தந்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார், அவருடன் நிர்வாகிகள் உடன் இருந்தனர்,

P.பாலு மணப்பாறை செய்தியாளர்