சென்னையில் உதவி காவல் ஆணையர்கள் 40 பேர் அதிரடி இடமாற்றம்: டிஜிபி திரு/ திரிபாதி இ.கா.ப அதிரடி உத்தரவு
சென்னையில் 40 உதவி காவல் ஆணையர்களை மாற்றம் செய்து டிஜிபி திரு/ திரிபாதி இ.கா.ப, உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து தமிழக டிஜிபி வெளியிட்ட அறிக்கை:
திருச்சியில் பணியாற்றி வந்த சுரேந்திரன் சென்னை எம்.கே.பி நகர் சரக உதவி கமிஷனராகவும், செயின்ட் தாமஸ் மவுண்ட்டில் பணியாற்றி வந்த செம்பெடு பாபு, செம்பியம் சரக உதவி கமிஷனராகவும், சென்னை எம்.கே.பி நகரில் பணியாற்றி வந்த கலைசெல்வன், தடை அமலாக்கப் பிரிவின் (சென்னை வடக்கு) உதவி கமிஷனராவும், வேலூரில் பணியாற்றி வந்த முத்துவேல் பாண்டி பூந்தமல்லி சரக உதவி கமிஷனராகவும், சேலத்தில் பணியாற்றி வந்த கமலக்கண்ணன் பாதுகாப்பு உதவி கமிஷனராவும், மயிலாப்பூரில் பணியாற்றி வந்த நெல்சன் அடையார் சரக உதவி கமிஷனராகவும், கோட்டூர்புரம் உதவி கமிஷனர் ஜீவானந்தம் தரமணி உதவி கமிஷனராகவும், திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் சரவணன் அயனாவரம் சரக உதவி கமிஷனராகவும், எழும்பூர் சரக உதவி கமிஷனர் சுப்பிரமணியன் கோட்டூர்புரம் உதவி கமிஷனராவும், அடையார் சரக துணை கமிஷனர் கவுதமன் மயிலாப்பூர் உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் தரமணி சரக உதவி கமிஷனர் ரவி துரைப்பாக்கம் சரக உதவி கமிஷனராவும், தி.நகர் சரக உதவி கமிஷனர் கலியான் வளசரவாக்கம் உதவி கமிஷனராவும், வடபழனி சரக உதவி கமிஷனர் ஆரோக்கிய ரவீந்திரன் பல்லாவரம் சரக உதவி கமிஷனராகவும், வளசரவாக்கம் சரக உதவி கமிஷனர் மகிமைவீரன் தடை அமலாக்கப்பிரிவின் (சென்னை கிழக்கு) உதவி கமிஷனராவும், மீனம்பாக்கம் சரக உதவி கமிஷனர் நடேசன் வேப்பேரி உதவி கமிஷனராவும், மக்கள் தொடர்பு உதவி கமிஷனர் பாஸ்கர் திருவல்லிக்கேணி சரக உதவி கமிஷனராகவும், நில அபகரிப்புக்கு எதிரான சிறப்பு பிரிவு டிஎஸ்பி ரகுபதி நுங்கம்பாக்கம் சரக உதவி கமிஷனராவும், சிஐடி பாதுகாப்பு பிரிவு டிஎஸ்பி கிரிஸ்டின் ஜெயசில் சைதாப்பேட்டை உதவி கமிஷனராவும், சிஐடி சிறப்பு பிரிவு டிஎஸ்பி புகழ்வேந்தன் கிண்டி சரக உதவி கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பூந்தமல்லி உதவி கமிஷனர் சுதர்சன் நீலாங்கரை சரக உதவி கமிஷனராகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணைப் பிரிவு டிஎஸ்பி பாலமுருகன் வடபழனி சரக உதவி கமிஷனராகவும், நீலகிரியில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த அமீர் அகமது செயின்ட் தாமஸ் மவுண்ட் சரக உதவி கமிஷனராகவும், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் அர்னால்ட் ஈஸ்டர் மீனம்பாக்கம் சரக உதவி கமிஷனராகவும், நில அபகரிப்புக்கு எதிரான சிறப்பு பிரிவு டிஎஸ்பி சீனிவாசன் தாம்பரம் சரக உதவி கமிஷனராகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணைப் பிரிவு உதவி கமிஷனர் முருகேசன் சேலையூர் சரக உதவி கமிஷனராகவும், செங்கல்பட்டு மாவட்ட குற்றப்பரிவு டிஎஸ்பி ஃப்ரான்க் டி ரூபன் மடிப்பாக்கம் சரக உதவி கமிஷனராகவும், தமிழ்நாடு சிறப்பு காவல் டிஎஸ்பி ரமேஷ் கீழ்பாக்கம் சரக உதவி கமிஷனராகவும், நீலாங்கரை உதவி கமிஷனர் சாகதேவன் வில்லிவாக்கம் சரக உதவி கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் மாவட்ட நில அபகரிப்புக்கு எதிரான சிறப்பு பிரிவு டிஎஸ்பி ரமேஷ் மற்றும் அரியலூர் டிஎஸ்பி வெற்றி செழியன் ஆகியோர் நுண்ணறிவுப்பிரிவு உதவி கமிஷனராகவும், நுண்ணறிவுப்பிரிவு உதவி கமிஷனர் அல்டிரின் போக்குவரத்து புலானாய்வு பிரிவின் உதவி கமிஷனராகவும், மதுரை ரயில்வே டிஎஸ்பி கருணாகரன் சென்னை மத்திய குற்றப்பிரிவு நுண்ணறிவு உதவு ஆணையராகவும், துரைப்பாக்கம் உதவி ஆணையர் ஜான் விக்டர் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராகவும், போலீஸ் தொலைதொடர்பு துறை டிஎஸ்பி ராஜசேகரன் சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராகவும், நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் அண்ணாதுரை சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராகவும், எண்ணூர் உதவி ஆணையராக இருந்த கந்தக்குமார் சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராகவும், சென்னை உயர்நீதிமன்ற உதவி ஆணையர் சரஸ்வதி சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராகவும், திருமங்கலம் உதவி ஆணையர் சிவக்குமார் மற்றும் தேனாம்பேட்டை உதவி ஆணையர் தேவராஜ் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்