திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 100 நாள் வேலை தொழிலாளர்கள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 100 நாள் வேலை தொழிலாளர்கள் சாலை மறியல்
மணப்பாறை வட்டம் வையம்பட்டி ஒன்றியதுக்கு உட்பட்ட ஆனையூரில் வேலை வழங்கவில்லை என கூறி 100 வேலை தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
அமையபுரம் ஊராட்சி ஆணையூரில் 100 நாள் பணியாளர்களுக்கு நிகழாண்டு பணிகள் வழங்கபடும் நிலையில் ஒரு குழுவுக்கு மட்டும் வேலை இல்லை எனகூறி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் திருப்பி அனுப்பி உள்ளனர், இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பெண்கள் மணப்பாறை – கரூர் சாலையில் வேலை செய்யும் உபகரணங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர், இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, தகவலறிந்து சென்ற வையம்பட்டி ஒன்றிய தலைவர் குணசீலன், ஊராட்சி தலைவர் தேவராஜ், மணப்பாறை அணைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மணமல்லி ஆகியோர், அளித்த உறுதியை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்

P.பாலு மணப்பாறை செய்தியாளர்