முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவரை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
சென்னை:
நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் அடையாறு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் முன் ஜாமீன் அளிக்க கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு தனிப்படை முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க மதுரை விரைந்துள்ளது. மற்றொரு தனிப்படையினர் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் ரஹ்மான் தமிழ்மலர் மின்னிதழ்