துபாயில் தாயை இழந்த 11 மாத குழந்தை விமானம் மூலம் அழைத்து வந்தனர்

துபாய்: கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால், தாயை இழந்த
11 மாதக் குழந்தை, விமானம் மூலம் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

துபாயில் உள்ள திமுக அமைப்பாளர் திரு/ M.S. மீரான் அவர்கள் கவனத்துக்கு தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, அவர் தமிழக முதல்வர் திரு/ மு.க. ஸ்டாலின் அவர்கள் கவனத்துக்கு கொண்டு அரசு மேற்கொண்ட தீவிர முயற்சியின் பேரில் (தற்போது)
11 மாத கைக்குழந்தை தந்தையிடம் சேர்க்கப்பட்டுள்ளது.

17/06/21 வியாழக்கிழமை மாலை துபாயி லிருந்து திருச்சி வந்த இண்டிகோ விமானத்தில் குழந்தை தேவேஷ் திருச்சி வந்து சேர்ந்தான்.

பாரதியுடன் பணியாற்றிய திருவாரூரைச் சேர்ந்த சதிஷ் என்ற இளைஞர் பாதுகாப்புடன் குழந்தையை கொண்டு வந்தார்.

குழந்தையை பாதுகாப்பாக கொண்டு வந்து தந்தையிடம் சேர்க்கும் வகையில் சதிஷை, அந்த நிறுவனத்தினர் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி, சித்தேரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் வேலவன் (38). அவரது மனைவி பாரதி. இவர்களுக்கு கடந்த 2008-ல் திருமணம் ஆன நிலையில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக விக்னேஷ், அகிலன், தேவேஷ் என 3 ஆண் குழந்தைகள். இதில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், முதல் குழந்தை விக்னேஷ்க்கு சிறு நீரக கோளாறு ஏற்பட்டு உயிரிழந்து விட்டது.

இதனால் அதற்கான மருத்துவ செலவு மற்றும் குடும்ப செலவுகளால் குடும்பம் வறுமைக்கு உள்ளானது.

வறுமையின் காரணமாக வேறு வழியின்றி வேலவன் தனது மனைவி பாரதியை, தனது 8 மாத கைக்குழந்தை தேவேஷுடன், துபையில் கூலி வேலை செய்ய கடந்த மார்ச் மாதம் அனுப்பி வைத்தார்.

அங்கு எதிர்பாராதவிதமாக கொரோனா தொற்றுக்கு உள்ளான பாரதி அண்மையில் உயிரிழந்துவிட்டார்.

எனவே கைக்குழந்தை தேவேஷ் ஆதரவற்ற நிலையில் துபையில் இருந்துள்ளது. பாரதி வேலை செய்த நிறுவனத்தினர் குழந்தையை காப்பகத்தில் வைத்து பராமரித்து வந்துள்ளனர்.

குழந்தையை பெற்றுக் கொண்ட வேலவன் குழந்தை வந்து சேர காரணமான அனைவருக்கும் நன்றியை தெரிவித்துச் சென்றார்.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்