சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்றார்.
அவர், சென்னையில் இருந்து நேற்று காலை தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது மனைவி துர்காவும் உடன் சென்றார்.
டெல்லி சென்றடைந்த மு.க.ஸ்டாலினை டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன் உள்பட தி.மு.க. எம்.பி.க்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
அதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு சென்றார். தமிழ்நாடு இல்லத்தில் அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து அரசியல் ரீதியாக ஆலோசனை நடத்தினார்.
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியுடன் சந்திப்பு மேற்கொண்ட பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை புறப்பட்டார்.
செய்தியாளர் ரஹ்மான் தமிழ்மலர் மின்னிதழ்