நாகர்கோவில் பகுதியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோரோணா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக காலை 4 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 500 பேருக்கு மட்டுமே தடுப்பூசி உள்ள நிலையில் தடுப்பூசி இருப்பு குறித்த முறையான தகவல்கள் இல்லாததால் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில் ஏமாற்றம் அடைந்தனர். 500 பேருக்கு தடுப்பூசி இருப்பதாக கூறிய நிலையில் 100 பேருக்கு மட்டுமே டோக்கன் கொடுக்கப்பட்டதால் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது