கொரோனா வைரஸ் உதவித்தொகை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு/ இ. கருணாநிதி எம்எல்ஏ துவக்கி வைத்தார்!

மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தேர்தல் அறிக்கையில் அறிவித்த கொரோனா நிவாரண உதவி தொகை ரூபாய் 4000/- தருவதாக அறிவித்து இருந்தார்.

கடந்த மே மாதம் தமிழக முதலமைச்சராக திரு/ மு.க. ஸ்டாலின் பதவி ஏற்றபின் கொரோனா வைரஸ் நிவாரணத் உதவிதொகை முதல் தவணையாக கடந்த மே மாதம் 15-ஆம் தேதி முதல் நியாயவிலை கடையில்
ரூபாய்,, 2000/- அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது.

இதைதொடர்ந்து இரண்டாவது தவணை நிவாரண உதவித்தொகை ரூ.2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்களின் தொகுப்பு வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் ஊராட்சிக்கு உட்பட்ட தீப்பாஞ்சி அம்மன் கோயில் தெருவில் உள்ள நியாய விலை கடை எண்: 5 ல் மற்றும் பொழிச்சலூரில் உள்ள நியாய விலை கடைகளில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு/ இ.கருணாநிதி MLA, அவர்கள் கலந்துகொண்டு நிவாரண உதவித்தொகை ரூ, 2000/- மற்றும் 14 வகை மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கி இத்திட்டத்தை துவங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் புனித தோமையார் மலை ஒன்றிய பொறுப்பாளர் திரு/ தா. ஜெயக்குமார்
பொழிச்சலூர் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்