கானத்தூர் ஊராட்சி பகுதியில் ரேஷன் கடையில் கொரோனா நிவாரணம் மற்றும் மளிகை பொருட்கள் விநியோகம்
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஜூன் மாதம் கொரோனா நிவாரணம் இரண்டாம் தவணையாக 2000 தொகையும், 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.
தமிழக அரசு உத்தரவின்படி இன்று செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், கானத்தூர் ரெட்டிக்குப்பம் பகுதியில் ரேஷன் கடை ஊழியர் திரு,வெங்கட் தலைமையில் அப்பகுதி மக்களுக்கு ரூபாய் 2000/- மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ் மலர் மின்னிதழ்

