போரூர் T-15 எஸ் ஆர் எம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு/ பாலகிருஷ்ணன் பிள்ளை வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு
தமிழக அரசு கொரோனவைரஸ் இரண்டாம் அலை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் மேலும் ஒரு வாரத்திற்கு ஜூன் 14ம் தேதியிலிருந்து ஜூன் 21ஆம் தேதி வரை காலை 6 மணி வரை ஊரடங்கு தளர்வுகளுடன் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக முதலமைச்சர் திரு/ மு க ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க தமிழக போக்குவரத்து காவல்துறை T-15 போரூர் எஸ் ஆர் எம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு/ பாலகிருஷ்ணன் பிள்ளை தலைமையில் போரூர் (SRM) T-15 காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட போரூர் சிக்னல் பகுதியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து தலைமைக் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
வாகன தணிக்கையில் தலைக்கவசம் முக கவசம், ஓட்டுனர் உரிமம் மற்றும் தமிழக அரசு அறிவித்திருந்த இ-பதிவு பெறாமல் சாலையில் அத்தியாவசியம் இன்றி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றின் விழிப்புணர்வு ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு பிரச்சாரம் செய்தனர்.
சாலையில் அத்தியாவசியம் இன்றி செல்லும் இருசக்கர வாகனங்கள் ஆட்டோக்கள் பறிமுதல் செய்து அபராதமும் விதித்தனர்,
S.முஹம்மது ரவூப் தமிழ் மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்