நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பூங்காக்கள்
தமிழகத்தில் கொரோனா பரவல் குறையத்தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வார காலத்திற்கு அதாவது வருகிற 21-ந்தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு செய்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடைப்பயிற்சிக்காக மட்டும் அனுமதிக்கப்படும். அதேபோல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கைகான பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் பூங்காக்களில் நடைபயிற்சிக்கு அனுமதியளிக்கப்பட்டதை தொர்ந்து சென்னையில் உள்ள பூங்காக்களில் காலைமுதல் மக்கள் மகிழ்ச்சியோடு நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
-செய்தியாளர்
செய்யது அலி.