வடக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரை ஒட்டி உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் நீடிக்கிறது.
இது அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெறக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு இன்று முதல் 16-ஆம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய ஓரிரு மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஒரு சில உள் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்.
சென்னையை பொறுத்தவரை இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மலர் மின்னிதழ் செய்தியாளர்.. தமீம் அன்சாரி