மாநகராட்சி ஆணையர்கள் உட்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழ் நாட்டிலுள்ள முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் கடந்த சில வாரங்களாகவே பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். ஜூன் மாதம் தொடங்கி மட்டும் 100க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு தற்போது 25 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிடமாற்றம் அளித்து உத்தரவிட்டுள்ளது.

கோவை, மதுரை, திருப்பூர், சேலம், திருநெல்வேலி ஆகிய மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம்!

இது குறித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவில்:

கோவை மாநகராட்சி புதிய ஆணையர் – ராஜகோபால் சுங்கரா & மதுரை மாநகராட்சி புதிய ஆணையர் – கே.பி.கார்த்திகேயன்
திருப்பூர் மாநகராட்சி புதிய ஆணையர் கிராந்திகுமார் & சேலம் மாநகராட்சி புதிய ஆணையர் – கிறிஸ்துராஜூ
திருநெல்வேலி மாநகராட்சி புதிய ஆணையர் -விஷ்ணு சந்திரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை துணை ஆணையர்கள் மாற்றம்
சென்னை மாநகராட்சி ஆணையராக ககன் தீப் சிங் பேடி உள்ள நிலையில், சென்னை மாநகராட்சிக்கு புதிய துணை ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி:

பிரசாந்த் ஐஏஎஸ் – சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்)

நர்னவாரே மணிஷ் சங்கரா – சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (சுகாதாரம்)

டி. சினேகா – சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்(கல்வி)

ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல சென்னை மாநகராட்சி தெற்கு பிராந்திய துணை ஆணையராக சிம்ரன்ஜித் சிங் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கூடுதல் கலெக்டர்கள்!

மேலும், மாநிலத்திலுள்ள கூடுதல் கலெக்டர்களுக்கும் பணியிடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி

பவன்குமார் – கடலூர், கூடுதல் கலெக்டர், திட்ட அலுவலர் & ரஞ்சித் சிங் – கடலூர் கூடுதல் கலெக்டர்(வருவாய்)

சரவணன் – ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை கூடுதல் இயக்குநர் & ஸ்ரீகாந்த் – தஞ்சாவூர் கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) திட்ட அலுவலர்

வைத்தியநாதன் – தர்மபுரி கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி அமைப்பின் திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐஏஎஸ் பணியிடமாற்றம்!

பிரதாப் – திருவண்ணாமலை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) & தினேஷ் குமார் – திண்டுக்கல் மாவட்ட கூடுதல் கலெக்டராக (வளர்ச்சி)

சரவணன் – தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) & சேக் அப்துல் ரஹ்மான் – சேலம் கூடுதல் கலெக்டராக (வளர்ச்சி)

பிரதிக் தயாள் – ஈரோடு மாவட்ட கூடுதல் கலெக்டராக (வளர்ச்சி) & சுகபுத்ரா – தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் கலெக்டராக (வளர்ச்சி)

அனு – தமிழ்நாடு அரசின் துணை செயலர் & இளம்பாஹாவத் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கூடுதல் இயக்குநராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்