தமிழகத்தில் ஊரடங்கு வெளியான கடும் அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. ஊரடங்கு பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் மக்கள் சிலர் அலட்சியமாக உள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத இரண்டு முறைதான் எச்சரிக்கை வழங்கப்படும். அடுத்த முறை கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். மேலும் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.
906 கடைகள் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு 100 பேர் வரை அபராதம் விதித்துள்ளோம் என அவர் கூறியுள்ளார்.
A. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்