பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கிய தூத்துக்குடி உதவி ஆய்வாளர்கள்

இரண்டாம் கட்ட கொரோனா அலையின் தீவிரத்தை கட்டுப்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் போது பலதரப்பட்ட மக்கள் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டு வருவதை மனதில் கொண்டு பல தன்னார்வலர்களும் , பல சமூக அமைப்புகளும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமாரின் ஆலோசனையின்படி , நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உதவிகள் செய்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து இன்று (08-06-2021) பைனான்சியர் முனியசாமி சார்பாக கொரோனா நிவாரணமாக அரிசி , காய்கறித் தொகுப்புகள் மற்றும் மசாலா பொருட்களை சக்தி விநாயகபுரம் பகுதி ஏழை, எளிய மக்களுக்கும் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதை தென்பாகம் காவல் உதவி ஆய்வாளர் வேல்ராஜ், வடபாகம் காவல் உதவி ஆய்வாளர்கள் ஆர்தர் ஜஸ்டின், சுந்தர்சிங் ஆகியோர் இணைந்து அரசு அறிவித்துள்ள கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு
35 நபர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினர்.
பெற்றுக்கொண்ட பொதுமக்களும் ஆட்டோ ஓட்டுனர்களும் தூத்துக்குடி காவல்துறையை பெரிதாக பாராட்டி சென்றனர். தமிழ்மலர் செய்திகளுக்காக செய்தியாளர் அரவிந்த் குமா