தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு : இ-பதிவு கட்டாயம்

சென்னை : தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடந்த மாதம் 10-ந் தேதி முதல் 7-ந் தேதி (இன்று) காலை 6 மணி வரை அமலில் இருந்தது.

இந்த நிலையில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு, அதாவது 14-ந் தேதி காலை 6 மணி வரையிலும் நீட்டித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது.

இதில் கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வாகன சோதனையில் அனைத்து வாகனமும் இ-பாஸ் பெற்று செல்கிறதா என்று J8 நீலாங்கரை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு, ராஜேஷ் கண்ணா தலைமையில் அக்கரை பகுதியில் வாகன சோதனை நடைபெற்றது. அதில் இ-பாஸ் பெறாத இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ் மலர் மின்னிதழ்