ஜீன்ஸ், டி சர்ட் அணியக்கூடாது என்று புதுடெல்லியில் சிபிஐயில் புதிய ஆடை கட்டுப்பாடு
புதுடெல்லி: சிபிஐ.யின் புதிய இயக்குனராக சுபோத் குமார் ஜெயிஸ்வால் சில நாட்களுக்கு முன் பொறுப்பேற்றார். அவர் பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, பணி நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இதன்படி, ஆண் அதிகாரிகள் அலுவலக முறைப்படியான உடைகளை (பார்மல்) அணிய வேண்டும். சாதாரண பேண்ட், சட்டை, ஷூ அணிந்து வரலாம். கண்டிப்பாக ஷேவ் செய்திருக்க வேண்டும். இதேபோல், பெண் அதிகாரிகள் புடவை, சாதாரண சட்டை பேண்ட் அணியலாம். இருதரப்பினரும் ஜீன்ஸ், டி சர்ட், ஸ்போர்ட்ஸ் ஷூ, செருப்பு அணிந்து அலுவலகத்துக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிபிஐ.யின் அனைத்து கிளை அலுவலகங்களில் பணிபுரியும், அதிகாரிகள், அலுவலர்களும் இந்த ஆடை கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
A. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்