கொரோனா வைரஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கி வைத்தார் திரு/ உதயநிதி ஸ்டாலின் MLA

தமிழக முதலமைச்சர் திரு/ மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுரைப்படி
தமிழக அரசு
சுகாதாரத்துறை
சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது,

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக் கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு/ உதயநிதி ஸ்டாலின் MLA,
அவர்கள் புதுப்பேட்டை மண்டலம் -5 கோட்டம்-63 பார்டர் தோட்டத்தில் உள்ள பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார்.

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் அமைக்கப்பெற்று அந்த வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டு பயன்பெற்றனர்.

தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைவருக்கும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு/ உதயநிதி ஸ்டாலின் MLA,
அனைவருக்கும் தண்ணீர் பாட்டில் பானங்கள் நல பொருட்களை வழங்கினார்.

இந்த சிறப்பு முகாமில் மண்டலம்-5-ல் உள்ள சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்