சென்னை ரிப்பன் மாளிகையில் பெயர் பலகை மீண்டும் திறப்பு : அமைச்சர்கள் பங்கேர்ப்பு
சென்னை ரிப்பன் மாளிகை கட்டடத்தில் தமிழ் வாழ்க, தமிழ் வளர்க என்கிற எழுத்துக்கள் பொறித்த பெயர் பலகை இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இதனை திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
-செய்தியாளர்
ரசூல் மொய்தீன்