கொடைக்கானலில் கனமழை காரணமாக புதியதாக போடப்பட்ட சாலைகள் அனைத்தும் சேதம்

கொடைக்கானலில் தண்ணீரில் அடித்துச் செல்லும் சாலைகள்: கொடைக்கானலில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகின்றது அதன்காரணமாக தேர்தலுக்கு முன்னதாக கொடைக்கானல் நகராட்சி மூலம் போடப்பட்ட சாலைகள் எல்லாம் மழை நீரினால் அடித்துச் செல்லப்படுகின்றன ஆங்காங்கே திடீர் பள்ளம் தோன்றி விபத்துக்குள்ளாகும் அபாயமும் உண்டு இந்த சாலை கொடைக்கானல் விஐபிகள் தங்கும் விடுதி யான சேக் அப்துல்லா மாளிகையிலிருந்து கொடைக்கானல் பிரசித்திபெற்ற குறிஞ்சி ஆண்டவர் கோவில் செல்லும் முக்கிய சாலை ஆகும் எனவே இந்த சாலைகளை கொடைக்கானல் நகராட்சி ஆணையர் மூலம் விரைந்து சாலைகள் சீரமைக்கப்படுமா மக்கள் எதிர்பார்க்கின்றனர் செய்தி ரமேஷ் தேவா கேமராமேன் செய்தி செல்வம்