சீன போர் விமானங்களை விரட்ட, தயார் நிலையில் மலேசியா போர் விமானங்கள்

சீன போர் விமானங்களை விரட்ட புறப்பட்ட மலேசிய போர் விமானங்கள் -தங்கள் நாட்டு வான் பகுதிக்குள் சீன விமானப்படை விமானங்கள் அத்துமீறி ஊடுருவியதாக மலேசியா அரசு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் சீன தூதரை அழைத்து விளக்கம் கேட்கப்படும் என்றும் மலேசிய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

தென் சீன கடல் பகுதியில் சீன விமானப்படையினரின் சந்தேகத்துக்குரிய நடமாட்டம் தொடர்பாக மலேசிய விமானப்படை எச்சரித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை சீன விமானப்படையின் 16 ஜெட் விமானங்கள் மலேசிய நாட்டின் கிழக்கு சராவாக் மாகாண வான் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது. அங்கு சில நிமிடங்கள் வட்டமிட்ட சீன விமானங்கள் பின்னர் திரும்பிச் சென்றன.

இந்த செயல்பாட்டை தங்கள் நாட்டின் தேசிய இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என்று மலேசியா கண்டித்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் அப்துல் ரசாக்