உதயநிதி ஸ்டாலின் MLA, நேரில் சென்று நலம் விசாரித்தார்

மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி யின் உதவியாளர் சண்முகநாதனை
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு/ உதயநிதி ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி யின் நிழலாகப் பார்க்கப்பட்டவர் சண்முகநாதன் 48 ஆண்டுகளாக கருணாநிதியின் நேர்முக உதவியாளராக பணியாற்றியவர்தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவரை மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்,MLA

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளவர், ‘முத்தமிழறிஞர் கலைஞரின் எண்ணங்களை உள்வாங்கி அவரது கண் அசைவுக்கு ஏற்ப காரியமாற்றியவர். சண்முகநாதன்
கலைஞருடைய அரசியல் வாழ்வின் ஆவணம். சண்முகநாதன் மாமா அவர்களை மருத்துவமனை சென்று சந்தித்து நலம் விசாரித்தேன்.

எனது தொகுதியிலுள்ள பணிகளை குறிப்பிட்டு நெகிழ்ச்சியோடு வாழ்த்திய மாமா அவர்களுக்கு அன்பும் நன்றியும்’ என்று உதயநிதி ஸ்டாலின்,MLA குறிப்பிட்டுள்ளார்.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்