புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரிக்கு கொரோனா தொற்று

கொரோனா இரண்டாவது பரவலை தடுக்கும் வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு பணிகளை முடுக்கிவிடும் பணிகளில் தொடா்ச்சியாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று காலை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மருத்துவா்களின் ஆலோசனைப்படி அவா் தனது ஆட்சியர் முகாம் அலுவலகத்திலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் மருத்துவர்களின் அறிவுரையின்பேரில் மருந்துகளையும் எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதியான நிலையில் ஆட்சியர் உமா மகேஸ்வரி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். செய்தியாளர், ரஹ்மான் தமிழ்மலர் மின்னிதழ்