சீனா மருத்துவர் ஃபைசல் சுல்தான், மற்றும் சீன அதிகாரி ஆகியோர் தடுப்பூசியை அறிமுகப்படுத்தினர்.
சீனா உதவியுடன் பாகிஸ்தான் தயாரித்த கொரோனா தடுப்பூசி; PAK VAC, ‘இன்குலாப்’ என பெயர் சூட்டியதுபாகிஸ்தானின் திட்ட அமைச்சர் அசத் உமர் (நடுவில்), மருத்துவர் ஃபைசல் சுல்தான், மற்றும் சீன அதிகாரி ஆகியோர் தடுப்பூசியை அறிமுகப்படுத்தினர்.
சீனாவின் உதவியுடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசியை பாகிஸ்தான் அரசு ‘இன்குலாப்’ என்று விவரித்துள்ளது. பாக் வேக் என்ற இந்த தடுப்பூசி செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
இது ஒரு முக்கியமான நாள் என்று வர்ணித்த பாகிஸ்தானின் மத்திய திட்ட அமைச்சர் அசத் உமர், பாகிஸ்தானின் இந்த தடுப்பூசி ‘இன்குலாப்’ அதாவது ஒரு புரட்சிக்கு குறைவானது அல்ல என்று கூறினார்.
தடுப்பூசி உற்பத்தி செய்ய உதவிய பாகிஸ்தானின் சுகாதார குழுக்களுக்கும், சீனாவுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் அப்துல் ரசாக்