மௌண்ட் உதவி ஆணையர் ((A/C) தலைமையில் வாகன தணிக்கை
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர், இந்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு (JUNE-7 ஆம் தேதி) தளர்வில்லா ஊரடங்கு அறிவித்து இருக்கும் இந்நிலையில் தமிழ் நாடு காவல் துறை டிஜிபி திரு/திரிபாதி அவர்களின் உத்தரவு படி சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு/ சங்கர் ஜிவால் அவர்களின் ஆலோசனையில் தகுந்த அரசு இ-பதிவு இல்லாமல் செல்லும் வாகனங்களை மௌண்ட் உதவி ஆணையர்/ திரு/ செம்ப்பேடு பாபு அவர்களின் தலைமையில் S-1 காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் காவல் உதவி ஆய்வாளர் திரு/ கந்தவேல் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கையில் மருத்துவ அவசரம்,மெடிக்கல் சம்மந்த பட்ட ஊழியர்கள்,அரசு ஊழியர்கள்,பத்திரிக்கை துறையினர்,அடையாள அட்டை காண்பித்து சென்றனர். அத்தியாவசிய இன்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்தனர்,. S.முஹம்மது ரவூப் தமிழ் மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்