பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வின் சமூக பணிகள்
கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் காரணமாக தமிழக அரசு தளவற்ற முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது.
இதில் ஏழை எளிய சாலையோர மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு சில தொண்டு இயக்கங்கள் ஏழை, எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்கி வருகின்றனர்.
இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வின் தென் சென்னை மாவட்டம் திருவல்லிகேணி மற்றும் மயிலாப்பூர் சார்பாக பசியோடு இருக்கக் கூடிய மக்களுக்கு இலவச உணவு விநியோகத் திட்டம் துவங்கப்பட்டது.
முதலாவது நாளான இன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக 150 நபர்களுக்கு மதிய உணவு திருவல்லிகேணி அரசு மருத்துவமனை மற்றும் பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் குடிசை பகுதிகளிள் வசிக்கும் மக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் தன்னார்வலர்களால் இலவச உணவு வழங்கப்பட்டது.
செய்தியாளர்
காஜா மொய்தீன்
தமிழ் மலர் மின்னிதழ்