கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தமிழக முதலமைச்சர்
திரு/மு.க.ஸ்டாலின் அவர்கள் கவச உடை அணிந்து கோவை (ESI) மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை (PPE KIT) உடை அணிந்து நோயாளிகளை நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தார்.
மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயை குணப்படுத்தும்.
தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று
அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தன் உயிரைப் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் முன் களப்பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன் என தமிழக முதலமைச்சர் திரு/
மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்