S-6 சங்கர் நகர் காவல் நிலையம் சட்டம் ஒழுங்கு காவல்துறை வாகன தணிக்கை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை உத்தரவுபடி தமிழகத்தில் முழு தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தி இருந்தது.
இந்நிலையில் மேலும் ஜூன் 7-ஆம் தேதி வரையில் ஊரடங்கு தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் முழுத் தளர்வில் ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசியம் இன்றி வெளியில் சுற்றும் இருசக்கர வாகனங்களை பம்மல் சங்கர் நகர் S-6 காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திருமதி/ மகுதிஸ்வரி அவர்களின் ஆலோசனைப்படி
சிறப்பு உதவி ஆய்வாளர் திரு/ டில்லி பாபு தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் ஊராட்சி உட்பட்ட சாலையில்
தகுந்த அனுமதி பெறாமல் மற்றும் இருசக்கர வாகனங்களில் முக கவசம் அணியாமல் செல்லும் நபர்களை காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் உதவியுடன் பிடித்து
ரூ/200/- அபராதம் விதித்தனர்.
தகுந்த அரசு இ-பதிவு பெறப்படாத வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
S. முஹம்மது ரவூப் தமிழ் மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்