பல்லாவரம் S-5 சட்ட ஒழுங்கு காவல்துறை வாகன தணிக்கை
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவி வருவதால் வாகனங்கள் சாலையில் செல்வதற்கு சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது
இந்நிலையில் கொரோனா வைரஸ் தளர்வில்லா ஊரடங்கு
(24/05/21) ஆம் தேதியில் இருந்து மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் மருத்துவ அவசரம்,இறுதி காரியம்,மற்றும் களப்பணியாளர்கள் ஊடகத்துறையினர் பத்திரிக்கையாளர்கள் தகுந்த அடையாள அட்டை காண்பித்து செல்லலாம் என்று அனுமதி வழங்கி இருந்தனர்.
இந்நிலையில் தகுந்த இ-பதிவு அனுமதி பெறாமல் வரும் வாகனங்களை பல்லாவரம் S-5 காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு/ ஆனந்த பாபு உத்தரவுப்படி பல்லாவரம் ( GST) சாலையில் உதவி காவல் ஆய்வாளர்
திரு/ செல்வ முருகேசன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர்,
சீனிவாசன்
காவலர்கள் உதவியுடன் தகுந்த அனுமதி பெறாமல் செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் இ-பதிவு பெறப்படாத வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
S. முஹம்மது ரவூப் தமிழ் மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்