குரோம்பேட்டை S-13 போக்குவரத்து காவல்துறை வாகன தணிக்கை
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவி வருவதால் வாகனங்கள் சாலையில் செல்வதற்கு சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது
இந்நிலையில் கொரோனா வைரஸ் தளர்வில்லா ஊரடங்கு
(24/05/21) ஆம் தேதியில் இருந்து மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வில்லா முழு ஊரடங்கு தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் மருத்துவ அவசரம்,இறுதி காரியம்,மற்றும் களப்பணியாளர்கள் அரசு பணியில் உள்ளவர்கள், ஊடகத்துறையினர் பத்திரிக்கையாளர்கள் தகுந்த அடையாள அட்டை காண்பித்து செல்லலாம் என்று அனுமதி வழங்கி இருந்தனர்.
இந்நிலையில் தகுந்த இ-பதிவு அனுமதி பெறாமல் வரும் வாகனங்களை குரோம்பேட்டை S-13 காவல் நிலைய போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு/ ஜெயக்குமார் உத்தரவுப்படி குரோம்பேட்டை S-13 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குரோம் பேட்டை சரவணா எதிரே ( GST) சாலையில் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர்
திரு/ சிவகுமார் தலைமையில் போக்குவரத்து
காவலர்கள் உதவியுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். தகுந்த அனுமதி பெறாமல் செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் இ-பதிவு பெறப்படாத வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
S. முஹம்மது ரவூப் தமிழ் மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்