காணொளி காட்சி மூலம் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் :

ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு சேவை வரி கவுன்சில் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும். ஆனால் நாடு கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து மீள்வதற்காக போராடி வருவதால் 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்தக் கூட்டம் நடத்தப்படவில்லை. 8 மாதங்களுக்கு பின்னர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடக்கிறது. இது ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 43-வது கூட்டம் ஆகும்.

டெல்லியில் இருந்தவாறு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் காணொலிக்காட்சி வழியாக இந்த கூட்டத்தை நடத்துகிறார். இதில் நிதித்துறை ராஜாங்க மந்திரி அனுராக் தாக்குர், மாநில நிதிமந்திரிகள், மூத்த அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். தமிழகத்தின் சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதல்முறையாக இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
-செய்தியாளர்
செய்யது அலி