கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் தலர்வில்லா முழு ஊரடங்கு பிறப்பித்து மக்கள் வெளியே வராதவாரு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில் அடையார், மண்டலம் 13 மாநகராட்சி அதிகாரிகளுடன், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் திரு.அசன் மௌலானா மற்றும் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி, தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களும் கலந்துகொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு மேலும் ஆலோசனை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் மண்டலம் 13 ஒருங்கிணைப்பு அலுவலர் திருமதி.சந்திரகலா, இ.ஆ.ப. மாநகராட்சி தெற்கு வட்டாரத் துணை ஆணையர் திரு.ராஜகோபால், சுங்கரா இ.ஆ.ப. மண்டலம் 13 உதவி ஆணையர் திரு.திருமுருகன், பகுதிச் செயலாளர் அரிமா திரு.சு.சேகர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்
முஹம்மது ஆரிஃப்
தமிழ் மலர் மின்னிதழ்