சற்று முன் : அரசு மருத்துவனையில் தீ விபத்து
சேப்பாக்கம் : கஸ்தூரி பாய் அரசு மருத்துவமனையில் திடீரென்று தீ விபதானது.
இதில் இரண்டாவது தளத்தில் குளிர் சாதனை பெட்டியின் மூலமாக மின் கசிவு ஏற்பட்டதால் இந்த விபத்து என்று மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.
இரண்டாவது தளத்தில் குழந்தைகள் தங்கும் வார்டு என்பதால் பதற்றம் ஏற்பட்டது. மேலும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று மருத்துவமனை தரப்பில் விளக்கம் தரப்பட்டது.
அங்கே இருக்கும் குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் அனைவரையும் வேறு தளத்திற்கு மாற்றப்பட்டது.
செய்தியாளர்
காஜா மொய்தீன்
தமிழ் மலர் மின்னிதழ்