குமரியில் வெள்ளப் பெருக்கு

குமரி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் ஆரம்பித்த மழையானது தற்போது வரை விடாது பெய்து வருகிறது, இரவு முழுவதும் சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது, இதனால் மாவட்டத்தில் பல இடங்களில் மதில் சுவர்கள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன, அதுமட்டுமல்லாமல் பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து மின் துண்டிப்பும் ஏற்பட்டன, பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக 300 வருடம் பழமையான மரம் மற்றும் சாலையோர மரங்கள் வேரோடு சாய்ந்தன, விடாது பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் கரையோர வீடுகளில் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டள்ளது எனவே கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ஏற்கனவே கொரோனா தொற்று மாவட்டத்தில் அதிகமாக இருக்கும் இந்த சூழலில் பெய்து வரும் தொடர் மழையானது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேச்சிப்பாறை அணைக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து.11300 கன அடி தண்ணீர் வெளியேற்றம். சிற்றாறில் 790 கன அடி திறப்பு. திற்பரப்பு அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு
நாகர்கோவில் நகரம் உள்பட மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால் ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது இதனால், விடிய விடிய தூங்காமல் பொதுமக்கள் தவித்தனர்.குளச்சல், மரமடி, குறும்பனை, இரும்பிலி பகுதியில் கனமழையால் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.ஈத்தாமொழியை அடுத்த பொழிக்கரை மீனவ கிராமத்தில் சுமார் 50 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைக்குள் தண்ணீர் புகுந்தால் உணவு பொருட்கள் சேதமடைந்தது.நேற்று காலை 8 மணியில் இருந்து மாலை 4 மணி நிலவரப்படி நாகர்கோவிலில் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. சுருளோடு- 36 மி.மீ, கன்னிமார்- 28.22 மி.மீ, பேச்சிப்பாறை- 2.7, பெருஞ்சாணி- 20.8 மி.மீ மழை பதிவாகி இருந்தது குறிபபிடத்தக்கது

கன்னியாகுமரி மாவட்ட நிருபர்
சதீஸ் குமார் தி