கொரோனா தொற்றால் பிரபல தயாரிப்பாளர் உயிரிழப்பு
குக்கூ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜு முருகன். இதையடுத்து ஜோக்கர், ஜிப்ஸி படங்களை இயக்கினார். இவருடைய அண்ணன் குரு என்கிற குமரகுருபரன் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
இவர் முன்னணி செய்தி ஊடகங்களில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். இவரது இறப்புக்கு ஊடகவியலாளர்கள் மற்ற திரைத்துறையினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
A. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்