ஆயுர்வேத சிகிச்சை மையம் திறந்து வைத்தார் : சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை : ஆழ்வார்பேட்டையில் 50 படுக்கைகள் கொண்ட கொரோனா ஆயுர்வேத சிகிச்சை மையத்தை கழக இளைஞரணிச் செயலாளர் மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான திரு.உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில், மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.P.K.சேகர் பாபு, திரு.தயாநிதி மாறன் எம்.பி, மயிலை சட்டமன்ற உறுப்பினர் திரு.த.வேலு மற்றும் பகுதிச் செயலாளர்கள் நந்தனம் திரு.மதி, திரு.முரளி, கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர்
அ.காஜா மொய்தீன்
தமிழ் மலர் மின்னிதழ்