மதுக்கடையில் மதுபானங்கள் பறிமுதல்

புளியங்குடி அருகே பாம்புக்கோவில் சந்தை ரோட்டில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. தற்போது ஊரடங்கு காரணமாக கடை அடைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு டாஸ்மாக் கடையில் மர்ம நபர்கள் சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடை மேலாளர், விற்பனையாளர்கள் புளியங்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே கடையில் கடந்த மாதம் பூட்டை உடைத்து ரூ.46 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
-செய்தியாளர்
செய்யது அலி