சென்னையில் J- 2 அடையார் போக்குவரத்து காவல்துறை வாகன தணிக்கை

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை பலவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லா ஊரடங்கு தமிழக அரசு அமல்படுத்தியது

இந்நிலையில் மருத்துவம் சம்பந்தப்பட்ட காரணங்கள் இறுதி காரியத்திற்கு செல்பவர்கள் மற்றும் களப் பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி அளித்தனர்.

தகுந்த
இ- பதிவு அனுமதி பெறாத வாகனங்களை J-2 அடையார் போக்குவரத்துகாவல் ஆய்வாளர் திரு/ ரவிச்சந்திரன் அவர்களின் உத்தரவுப்படி
அடையார் மேம்பாலம் சிக்னல் பகுதியில் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர்கள் வின்சென்ட், ராஜேந்திரன் தலைமையில் காவலர்கள் உதவியுடன் வாகன தணிக்கை நடைபெற்றது,

S.முஹம்மது ரவூப் தமிழ் மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்