கொரோனா தொற்று பகுதியில் தடுப்பு வேலி அமைப்பு

உலகளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால் தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் தலைமையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்கள் உடன் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார், அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனை, பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் உத்தரவுபடி பொழிச்சலூர் ஊராட்சியில் உள்ள வார்டுகளில் பிள்ளையார் கோயில் தெரு, வெங்கடேஸ்வரா மெயின் தெரு, சக்தி வினாயக கோவில் தெரு, (நேரு நகர்) ஆகிய தெருக்களில் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதால் அப்பகுதிகளில்.
சிட்லபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவ கலைச்செல்வன், கிராம ஊராட்சி அலுவலர் கார்த்திக், ஆலோசனையில் ஊராட்சி செயலர் பொற்கொடி, மேற்பார்வையில்
ஊராட்சி மன்ற தூய்மைப் பணியாளர்கள் தெருக்களில் உள்ளவர்கள் வெளியில் வராமல் இருக்க தடுப்பு வேலிகளை அமைத்து முழு கண்காணிப்பில் ஈடுபட்டனர்,.

S.முஹம்மது ரவூப் தமிழ் மலர் மின்னிதழ்