காவலர்கள் வாகன சோதனை :

சென்னை : கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக முழு ஊரடங்கு இருந்து வரும் நிலையில், தேவையின்றி சுற்றி திரியும் நபர்களையும் மற்றும் வாகனத்தில் வருபர்களையும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று டாக்டர் இராதா கிருஷ்ணன் சாலையில் டிராபிக் ஆய்வாளர் கதிரவன் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.

இதில் தேவையில்லாமல் வெளியே வந்தவர்களை கண்டித்து திரும்ப அனுப்பி வைத்தும், சிலருக்கு அபராதம் விதித்தும் அனுப்பி வைத்தனர்.

செய்தியாளர்
ரசூல் மொய்தீன்
தமிழ் மலர் மின்னிதழ்