வாகன சோதனையில் ஈடுபட்ட காவலர்கள்


இன்று (22/05/21), சென்னையில் இருசப்ப கிராமணி சாலையில் அமைந்துள்ள N.K.T. பெண்கள் மேனிலை பள்ளிக்கு அருகாமையில் காவல் துறையினர் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பெரும்பாலான கடைகளில் திறக்கப்படாத காரணத்தால் மக்கள் அவர்களது வீட்டிலிருந்து சற்று தொலைவாக சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சென்றுள்ளனர். அங்கே வாகன சோதனையில் ஈடுபட்ட காவலர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கியும், சிலர் தேவையின்றி வெளியே சுற்றியவர்களுக்கு அபராதமும் விதித்தனர்.
-செய்தியாளர் ரசூல் மொய்தீன்.