கொரோனா நோய் பரவல் தடுப்பு ஆய்வு மையம்!
கொரோனா நோய் பரவல் தடுப்பு ஆய்வு மையம்!
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை பலவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்களும் மாவட்ட ஆட்சியர்கள் அரசு அதிகாரிகள் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள், இந்நிலையில் எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டலம்-5 கோட்டம் 61
டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொரோனா நோய் பரவல் தடுப்பு ஆய்வு மையம் படுக்கைகள் சக்கிஜன் வசதியுடன் தயார் நிலையில் உள்ளது. இதை அறநிலையத்துறை துறை அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன்,MP,(முன்னாள் மத்திய அமைச்சர்) மாநகராட்சி ஆணையர் சுகந்திப் சிங் பேடி, இ,ஆ,ப, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மற்றும் மண்டலம்-5 உள்ள மண்டல அலுவலர்கள் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்