காவல் துறை வாகன பரிசோதனை!

பம்மல் S-6 சங்கர் நகர் காவல் துறை வாகன பரிசோதனை!

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு நேர கட்டுப்பாட்டுடன் கூடிய ஊரடங்கு அமல் படுத்தியது, இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதியில் இருந்து 24-ஆம் தேதி வரை மளிகை கடைகள் காய்கறி கடைகள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக நேர கட்டுப்பாட்டுடன் காலை 6 மணி முதல் 10:00 மணி வரையில் கடைகளுக்கு அனுமதி அளித்திருந்தது,
இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் காவல்துறையினர்களால் ஆங்காங்கே தடுப்புகளை வைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர், இந் நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் சங்கர் நகர் S-6 காவல் நிலையத்திற்கு உட்பட்ட பம்மல் சாலையில் பம்மல் சங்கர் நகர் S-6 காவல் நிலைய (crime) காவல் ஆய்வாளர் வெங்கடேசன், தலைமையில், உதவி காவல் ஆய்வாளர்கள்
விநாயகமூர்த்தி, கலைச்செல்வி, மற்றும் தலைமை காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர், வாகன தணிக்கையில் தகுந்த மருத்துவ அவசரம் இறுதிச் சடங்கு மெடிக்கல் சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு அனுமதி அளித்தனர்,
இ-பதிவு அனுமதி பெறப்படாத வாகனங்களை பறிமுதல் செய்து
அனுமதி பெறாத வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்,

S.முஹம்மது ரவூப் தமிழ் மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்