களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நேரில் களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின், எம்எல்ஏ!

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் அதன் பாதிப்பு நாளுக்கு நாளுக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன்காரணமாக மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாத நிலை இருக்கிறது. ஆகவே தமிழக அரசு பல இடங்களில் கொரோனா சிகிச்சை மையத்தை அமைத்து வருகிறது.
இந்நிலையில் ராயப்பேட்டை வெஸ்லி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தை திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார. மேலும் இந்த இந்த மையம் ஓரிரு நாளில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வண்ணம் பயன்பாட்டுக்கு வரும் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள ராயப்பேட்டை வெஸ்லி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டேன்.
இந்த மையம் ஓரிரு நாளில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வண்ணம் பயன்பாட்டுக்கு வரும் என சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் MLA, தெரிவித்தார்.நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்,