வியாபாரிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
தென்காசி,
இன்று (19-05-21), சுவாமி சன்னதி பகுதியில் அமைந்துள்ள சந்தையில் பெரும்பாலான மொத்தவிலை கடைகளில் வியாபாரிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
நேரக்கட்டுப்பாட்டால் பெரும்பாலான கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கான நேரமில்லாத காரணத்தால் சில்லறை வணிகமும், மொத்த வணிகமும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகளின் மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் அந்த பகுதியில் உள்ள அனைத்து வியாபாரிகளும் தாங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு துணை நிற்போம், கொரோனா என்கிற பெருந்தொற்றை விரட்டி அடிக்க எங்களது முழு ஒத்துழைப்பும் தமிழக அரசுக்கு கொடுப்போம் என்று கூறுகின்றனர். ஆயினும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று சொல்கின்றனர் இதனால் கூட்ட நெரிசலையும் நாட்டின் பொருளாதாரத்தையும் பேணி காக்கலாம் என்று ஆலோசனையும் கூறுகின்றனர்.
- செய்தியாளர்
செய்யது அலி.